News

இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது எரிபொருள் ஒதுக்கீடு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் QR குறியீட்டு முறைமையின் கீழ் வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது.

புதிய திருத்தத்தின்படி:

கார்களுக்கான ஒதுக்கீடு 15 லீற்றரிலிருந்து 25 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களுக்கு 5 லீற்றரிலிருந்து 8 லீற்றராகவும், திரிவீலர்களுக்கு 15 லீற்றரிலிருந்து 20 லீற்றராகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வான்களுக்கு 50 லீற்றராகவும் (முன்னர் 40), பஸ்களுக்கு 100 லீற்றராகவும் (முன்னர் 60) ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

லொறிகள் வழமை போல் 200 லீற்றரையும், விசேட வாகனங்கள் 40 லீற்றரையும் தொடர்ந்தும் பெறும்.

தரைவழி வாகனங்களுக்கான ஏனைய ஒதுக்கீடுகளும் அந்தந்த

எல்லைகளுக்குள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக CPC அறிவித்துள்ளது.

இது வாகன உரிமையாளர்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button