Sri Lanka News

கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று 5 மணிநேர நீர்வெட்டு!

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் தடைப்படுவதன் காரணமாக, இன்று (29) ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை (5 மணித்தியாலங்கள்) இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் (களுபோவில, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை மொரட்டுவ – ராவத்தாவத்தை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளுக்கு இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் விநியோகம் தடைப்படுவதால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button