Sri Lanka News

மன்னார் மறைமாவட்டத்தில் தவக்காலக் கல்வாரி பாதையாத்திரை பயபக்கியுடன் ஆரம்பம்

​மன்னார் மறைமாவட்டத்தின் வருடாந்த தவக்கால நிகழ்வுகளில் ஒன்றான கோமரசன்குளம் பாதயாத்திரையானது புனித செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து இன்றைய தினம் (11) பக்திபூர்வமாக ஆரம்பமானது.

​மறைமாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த திரளான பக்தர்களின் பங்கேற்புடன், ஆரம்ப நிகழ்வாக விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத்திருப்பலியை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார்.

​திருப்பலி நிறைவில், மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களின் விசேட இறையாசீர்வாதத்துடன் திருயாத்திரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிலுவையை ஏந்திய வண்ணம் இறைமக்கள் தவக்காலப் பாடல்களைப் பாடி, செபங்களைச் சொல்லியபடி தமது பயணத்தைத் தொடர்ந்தனர்.

யாத்திரிகர்கள் காலை வேளையில் இசைமானத்தாழ்வு ஆலயத்தைச் சென்றடைந்து அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தனர்.

​ ஓய்வுக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மடு சந்தி (Madhu Road) நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

​இன்றைய நாள் இறுதியில் யாத்திரிகர்கள் கன்னட்டி புனித அந்தோனியார் ஆலயத்தை சென்றடைவர். இன்றைய இரவுப் பொழுது அங்கு தங்குதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

​நாளைய தினம்வியாழக்கிழமை (12.03.2026) காலை கன்னட்டி ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்ட பின், அங்கிருந்து நடைபயணமாக வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தை நோக்கிப் பாதையாத்திரை தொடரவுள்ளது.

​மறைமாவட்டத்தின் ஆன்மீக எழுச்சியாகக் கருதப்படும் இந்தப் பாதையாத்திரையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

செய்தியாளர்
க.டினேஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button