Sri Lanka News
தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது

பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் மீதான தேவை அதிகரிப்பு மற்றும் அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி காரணமாகத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4,800 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகளாவிய பொருளாதாரச் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான புகலிடமாக நாடுவதால் இந்தத் திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
டொலரின் மதிப்பு பலவீனமடைந்து வருவதும் இந்த விலையேற்றத்திற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது.




