Sri Lanka News

இலங்கையில் தனிநபரின் குறைந்தபட்ச மாதாந்திர செலவு; கொழும்பில் வாழ்பவர்களுக்கு அதிர்ச்சி

இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்திர செலவு குறித்த புதிய தகவல்களை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்படி, ஒரு தனிநபர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவைப்படுகிறது.

அதற்கமைய, நாட்டின் அதிகூடிய செலவைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது.

இங்கு ஒருவர் வாழ்வதற்கு மாதம் 18,044 ரூபாய் தேவைப்படுகிறது.மிகக்குறைந்த செலவைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது.

இங்கு அடிப்படைத் தேவைகளுக்கு 15,997 ரூபாய் போதுமானதாக உள்ளது.

பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தரவுகள் மாதாந்தம் திருத்தப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button