காயத்தால் வெளியேறிய கம்மின்ஸ் : அவுஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ள புதிய வேகப்பந்து வீச்சாளர் யார்?

2026 டி20 உலகக் கிண்ணத்தொடர் ஆரம்பிக்க சில நாட்களே உள்ளன.
இந்தநிலையில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் டெஸ்ட் அணித் தலைவர் பெட் கம்மின்ஸ் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
கடந்த ஆறு மாதங்களாக கம்மின்ஸைத் துன்புறுத்தி வரும் முதுகுவலி காரணமாக, அவர் முழுமையாகக் குணமடைய இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கம்மின்ஸுக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பென் துவர்ஷுயிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது வேகம் மற்றும் ஸ்விங் பந்துவீச்சு இலங்கையின் ஆடுகளங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் எனத் தேர்வுக் குழு கருதுகிறது.
அவுஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியல்:
மிட்செல் மார்ஷ் (தலைவர்)
டிராவிஸ் ஹெட்
கிளென் மேக்ஸ்வெல்
ஜோஷ் ஹேசில்வுட்
அடம் ஸம்பா
மார்கஸ் ஸ்டோய்னிஸ்
கெமரூன் கிரீன்
ஜோஷ் இங்கிலிஸ்
டிம் டேவிட்
மெத்யூ ரென்ஷா
பென் துவர்ஷுயிஸ்
சேவியர் பார்ட்லெட்
நாதன் எல்லிஸ்
மேத்யூ குன்னெமன்
கூப்பர் கோனோலி




