U 19 உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை குழாம் அறிவிப்பு – தமிழ் பேசுவோருக்கும் வாய்ப்பு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ இலங்கை இளையோர் குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
நமீபியா மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடருக்காக, கொழும்பு ரோயல் கல்லூரியின் நட்சத்திர வீரர் விமத் தின்சார தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவராக கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியின் கவிஜ கமகே செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இவருடன் விக்னேஸ்வரன் ஆகாஷ் (சென்.ஜோசப் கல்லூரி,மருதானை) மற்றும் ஜீவந்த ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி,கொழும்பு) ஆகியோரும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர, திமந்த மஹவிதான, விரான் சமுதித்த, துல்நித் சிகேரா, சாமிக ஹீந்திகல, ஆதம் ஹில்மி, சமரிந்து நெத்சர, செத்மிக செனவிரத்ன, ராசித் நிம்சர, செனுஜ வேகூனகொட, மலிந்த சில்வா ஆகியோரும் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அணி உலகக் கிண்ணத் தொடருக்கான ஆயத்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவும், அந்நாட்டுக் காலநிலைக்கு ஏற்றவாறு தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்காகவும் இலங்கை அணி இன்று (1) நமீபியா நோக்கிப் புறப்பட்டது.U 19 உலகக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை குழாம் அறிவிப்பு – தமிழ் பேசுவோருக்கும் வாய்ப்பு
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட உத்தியோகபூர்வ இலங்கை இளையோர் குழாமை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
நமீபியா மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடருக்காக, கொழும்பு ரோயல் கல்லூரியின் நட்சத்திர வீரர் விமத் தின்சார தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உப தலைவராக கண்டி கிங்ஸ்வுட் கல்லூரியின் கவிஜ கமகே செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குகதாஸ் மதுலன் உள்வாங்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இவருடன் விக்னேஸ்வரன் ஆகாஷ் (சென்.ஜோசப் கல்லூரி,மருதானை) மற்றும் ஜீவந்த ஸ்ரீராம் (வெஸ்லி கல்லூரி,கொழும்பு) ஆகியோரும் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர, திமந்த மஹவிதான, விரான் சமுதித்த, துல்நித் சிகேரா, சாமிக ஹீந்திகல, ஆதம் ஹில்மி, சமரிந்து நெத்சர, செத்மிக செனவிரத்ன, ராசித் நிம்சர, செனுஜ வேகூனகொட, மலிந்த சில்வா ஆகியோரும் குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அணி உலகக் கிண்ணத் தொடருக்கான ஆயத்தப் போட்டிகளில் பங்கேற்பதற்காகவும், அந்நாட்டுக் காலநிலைக்கு ஏற்றவாறு தம்மைத் தயார்படுத்திக் கொள்வதற்காகவும் இலங்கை அணி இன்று (1) நமீபியா நோக்கிப் புறப்பட்டது.