Sports
சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து சாதனை படைக்கும் ஹர்திக் பாண்டியா

இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 5ஆவதும் கடைசியுமான டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 231 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 201 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.
இந்திய அணி சார்பில் திலக் வர்மா 73 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 63 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.
இந்தநிலையில், ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்த 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும், அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையையும் பாண்டியா முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




