ஏஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு வந்த புதிய சிக்கல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஏஷஸ் (Ashes) டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதுகு வலி காரணமாக அவர் முதல் டெஸ்டில் இருந்து விலகியுள்ள நிலையில், ஐந்து போட்டிகள் கொண்ட முழு தொடரையும் பெட் கம்மின்ஸ் தவறவிட நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலாவது டெஸ்ட் போட்டியில் பெட் கம்மின்ஸ் விலகியுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) அவுஸ்திரேலிய அணியை வழிநடத்த வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
பெட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், ஸ்கொட் போலண்ட் (Scott Boland) தற்போது ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருடன் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகப் பேர்த்தில் களமிறங்க வாய்ப்புள்ளது.
ஏஷஸ் (Ashes) டெஸ்ட் தொடர் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பமாகி, ஜனவரி 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



