Sri Lanka News
டிட்வா சூறாவளி கொடுப்பனவு : பயனாளிகளுக்கு முக்கிய செய்தி

டிட்வா சூறாவளியினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் 50 இலட்சம் ரூபா கொடுப்பனவை, ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் வழங்க ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன், அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதம் கடப்பதற்கு முன்னர் சேதமடைந்த வீதிகளில் 99 சதவீதமானவற்றை புனரமைக்க தமது அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.




