Sri Lanka News
அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 80ஆம் ஆண்டு ‘அமுத விழா’ வேலைத்திட்டங்களுக்கு பிரதமரின் ஆதரவு .

‘” Towards Eighty” ’ என்ற தொனிப்பொருளில் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் எண்பதாவது வருட நிறைவை கொண்டாட இருக்கும் இந்த ஆண்டினை (2025/2026) பல்வேறு வேலைத்திட்டங்கள் மூலம் அலங்கரிக்க நாம் திட்டமிட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நமது வேலைத்திட்டங்கள் நிறைவேறி எமது 80வது ஆண்டு ‘அமுத விழா’ சிறப்படைய தயாரிக்கப்பட்ட வாழ்த்து பதாகையினை ( Symbolic Launch ) இன்று பாடசாலைக்கு வருகை தந்த நம் நாட்டின் பிரதமர் கௌரவ Dr. ஹரிணி அமரசூரிய அவர்கள் பார்வையிட்டதன் பின்னர் தனது கையொப்பத்தை இட்டு ஆதரவினை வழங்கிச்சென்றார்.




