Sri Lanka News
சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் ஐவருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் விசேடமாக குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் SSP முத்துமால , சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக விசாரணைப் பணியக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்