Sri Lanka News

நாட்டில் வழமைக்குத் திரும்பியது எரிபொருள் விநியோகம்

நாட்டின் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் சிறிய அளவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவினாலும், விநியோக நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஒலிப்பதிவிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திநிலையில் நேற்று (மார்ச் 2) விநியோகிக்கப்பட்ட எரிபொருள் அளவுகள் வருமாறு ,டீசல்: 1 கோடி 3,28,000 லீற்றர்92 ரக பெற்றோல்: 1 கோடி17,02,000 லீற்றர்மண்ணெண்ணெய்: 5,68,000 லீற்றர்95 ரக பெற்றோல்: 8,48,000 லீற்றர்சுப்பர் டீசல்: 3,43,000 லீற்றர்இன்று (மார்ச் 3) காலை 8:00 மணி வரை விநியோகிக்கப்பட்ட அளவு:இன்று காலை 6:00 மணி முதல் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

டீசல்: 4,15,740 லீற்றர்92 ரக பெற்றோல்: 4,81,800 லீற்றர்95 ரக பெற்றோ: 39,600 லீற்றர்சுப்பர் டீசல்: 19,800 லீற்றர்எரிபொருள் விநியோகம் சீராக நடைபெறுவதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.

இன்று மதியமாகும் போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் இல்லாத நிலை உருவாகும் என்றும், எரிபொருளைச் சேமித்து வைக்க முயற்சிக்காமல் வழமை போல நுகர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button