News
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட டயானா கமகே – நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றில் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தொடர்ந்து, 10 மில்லியன் மதிப்புள்ள சரீரப்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் மீது தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராக தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.