Sports
ரோஹித் கேப்டன் பதவி பறிப்பு: பிசிசிஐ முடிவால் எழும் கேள்விகள் – முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர்.
ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்
இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன.




