Sri Lanka News
இலங்கைக்கு அதிகளவில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள்

2026ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 25 நாட்களில் இலங்கை 223,645 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றுள்ளது, என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் ஒரே நாளில் அதிகளவு பயணிகள் ஜனவரி 15-ஆம் திகதி வருகை தந்துள்ளனர்.
அந்த எண்ணிக்கை 41,603 ஆகும். இதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 22,876 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 23,329 பேரும், ஜேர்மனியிலிருந்து 14,431 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




