REAL NAJA MEGA NIGHT- 2025 மென்பந்து கிண்ணத்தை வென்றது அட்டாளச்சேனை சோபர் அணி

மஜீட். ARM
சம்மாந்துறை ரியல் நஜா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த REAL NAJA MEGA NIGHT- 2025 மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டம் அக்டோபர் (07) சென்னல் சாஹிரா பாடசாலை மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்தப் போட்டியில், அட்டாளச்சேனை சோபர் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில், அட்டாளச்சேனை சோபர் அணி பலம் பொருந்திய சம்மாந்துறை நியூ சன் அணியை எதிர்கொண்டது. இதில் நியூ சன் அணியை வெற்றிகொண்ட சோபர் அணி, வெற்றிக் கிண்ணத்தையும் 80 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும் தனதாக்கிக் கொண்டது.
இரண்டாம் இடத்தைப் பிடித்த சம்மாந்துறை நியூ சன் அணி, வெற்றிக் கிண்ணத்துடன் 40 ஆயிரம் ரூபாய் பணப்பரிசையும் பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், அட்டாளச்சேனை சோபர் அணி மென்பந்து கிரிக்கெட்டில் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.
சம்மாந்துறை நியூ சன் அணி ,மற்றும் அட்டாளச்சேனை சோபர் அணிக்கு எமது சோசியல் டிவி சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்…




