Sports
இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை – பாகிஸ்தான்

தமது அணியுடனான இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் இனியும் கெஞ்சப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
முன்னதாக, இருதரப்பு தொடர்களில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடாது என இந்திய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடுவதற்கான அனுமதியும் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.
எனினும், ஆசிய கிண்ணத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்கியது.
இந்தநிலையிலேயே, தமது அணியுடனான இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்சப் போவதில்லை எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மோசின் நக்வி அறிவித்துள்ளார்.