ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை — முழுவதும் சுழற்பந்து வீச்சாளர்களை நம்பிய வெஸ்ட் இண்டீஸ்!

மிர்பூர்: வங்காளதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஆட்டம் நேற்று மிர்பூரில் நடைபெற்றது.
முதலாவது ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது ஆட்டம் அதிரடியாக நடைபெற்ற நிலையில், இரு அணிகளும் சமனில் முடித்ததால், முடிவை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 10 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய வங்காளதேச அணி 9 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வரலாற்றுச் சாதனை படைத்தது. 50 ஓவர்களையும் முழுமையாக சுழற்பந்து வீச்சாளர்களால் வீசச் செய்தது. அகீல் ஹொசைன், ரோஸ்டன் சேஸ், காரி பியர், குடகேஷ் மோட்டி, அலிக் அதனேஸ் ஆகியோர் தலா 10 ஓவர்கள் வீசினர்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முழுமையாக சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு 50 ஓவர்களை வீசிய முதல் அணி என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது.




