Sri Lanka News

2026இல் வெளிநாடு செல்லப்போகும் 3 லட்சம் இலங்கையர்கள்

2026 ஆம் ஆண்டில் 3,10,000 இலங்கைத் தொழிலாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி தற்போதைய தரவுகளின்படி, குவைத் நாடு அதிகபடியான தொழிலாளர்களை எதிர்பார்க்கின்றது. இதற்கமைய 77,500 தொழிலாளர்களுடன் குவைத் முன்னணியில் உள்ளது.

அத்துடன் ஐக்கிய அரபு அமீரகம் 63,500 தொழிலாளர்களையும், கட்டார் 44,000 தொழிலாளர்களையும், சவூதி அரேபியா 31,000 தொழிலாளர்களையும் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவை தவிர மேலும் 17 நாடுகளுக்குப் பணியாளர்களை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கங்களுக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில், இஸ்ரேலுக்கு 15,000 பேரும், ஜப்பானுக்கு 12,500 பேரும், தென் கொரியாவிற்கு 6,000 பேரும் அனுப்பப்படவுள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் சுமார் 3,11,207 தொழிலாளர்கள் வெளிநாடு சென்றிருந்தனர்.

இதன் மூலம் இலங்கைக்கு 8,000 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான அந்நிய செலாவணி வருமானமாகக் கிடைத்துள்ளது.

இந்த ஆண்டில் ஜனவரி மாதத்தில் மட்டும் இதுவரை 20,484 பணியாளர்கள் வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button