Sri Lanka News
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ‘ஈ-கேட்’ இன்று திறப்பு!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படுவதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடனேயே இந்த ‘ஈ-கேட்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன் ஊடாக விமான நிலையத்தின் வினைத்திறனை அதிகரிக்க முடியும் எனவும் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.



