Sports
இலங்கை – பங்களாதேஷ் அணியின் ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (02) நடைபெற உள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகல் – இரவு போட்டியாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்களாதேஷ் ஒருநாள் அணிக்கு மஹ்தி ஹசன் மிராஸ் முதல் முறையாக கேப்டனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணி சரித் அசலங்கா தலைமையில் செயல்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே மூன்று ரி20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.