Sports
சிம்பாப்வே தொடரிலிருந்து வெளியேறும் வனிந்து ஹசரங்க

பங்களாதேஷ் அணியுடனான போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரர் வனிந்து ஹசரங்க சுற்றுலா சிம்பாப்வே அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, துனித் வெல்லலகே மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சுப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், குறித்த தொடரில் மதீஷ பத்திரன மற்றும் நுவான் துஷார ஆகியோர் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப்டம்பர் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது