Sports
ஜோஸ் பட்லரின் அதிரடி சாதனை

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் 13,000 ஓட்டங்களைக் கடந்த 7 ஆவது வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் (Jos Buttler) படைத்துள்ளார்.
வைட்டலிட்டி பிளாஸ்ட் (Vitality Blast) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போது அவர் குறித்த மைல்கல்லை எட்டினார்.
முன்னதாக கிறிஸ் கெய்ல் (Chris Gayle) , பொலார்ட் (Kieron Pollard) , அலெக்ஸ் ஹேல்ஸ் (Alex Hales) , சோயிப் மாலிக் (Shoaib Malik) , விராட் கோலி (Virat Kohli) மற்றும் டேவிட் வோர்னர் (David Warner) ஆகியோர் குறித்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.