கத்தாரில் நடைபெறும் ‘தோஹா ஈக்வெஸ்ட்ரியன் டூர் 2026’ (Doha Equestrian Tour) தொடரின் முதல் போட்டி

கத்தாரில் நடைபெறும் ‘தோஹா ஈக்வெஸ்ட்ரியன் டூர் 2026’ (Doha Equestrian Tour) தொடரின் முதல் போட்டியான ‘மேன்மைதங்கிய அமீர் தந்தை குதிரையேற்றப் போட்டி’ (HH the Father Amir Equestrian Prix) இன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது.
இந்தப் போட்டிகள் கத்தாரின் அல் ஷகப் (Al Shaqab) வளாகத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற லாஞ்சின்ஸ் அரங்கில் (Longines Arena) ஜனவரி 2 முதல் ஜனவரி 31 வரை நடைபெறவுள்ளன.
உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற 240-க்கும் மேற்பட்ட குதிரையேற்ற வீரர்கள் இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்று வருகின்றனர்.
இந்தப் போட்டிக்காக மட்டும் 3.3 மில்லியன் யூரோக்களுக்கு மேற்பட்ட பரிசுத் தொகை ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கத்தாரின் விளையாட்டு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போட்டி, கத்தாரின் அமீர் தந்தை ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் பெயரில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் Social TV ஊடகத்தின் பணிப்பாளர் NMM சிறாஜ் அவர்கள் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.





