Sports
மூன்றாவது ஆசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பங்கேற்று நாடு திரும்பிய இலங்கை இளையோர் கபடி அணியை, அம்பாறை மாவட்ட கபடி சங்கம் அன்புடன் வாழ்த்தி வரவேற்றது.

பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பங்கேற்ற இளையோர் அணி, நாட்டுக்கு திரும்பியதையொட்டி, விமான நிலையத்தில் மலர் மாலை அணிவித்து உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சுமார் ஆறு வருடங்களுக்கு பின்னர், இலங்கை இளைஞர் கபடி அணி சர்வதேச போட்டியில் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட கபடி சங்கத்தின் செயலாளர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இளையோர் கபடி வீரர்கள் எதிர்காலத்தில் சிறந்த திறமையுடன் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும், சோசியல் டிவி சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறோம்.




