
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள குறித்த போட்டியில், தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில் குறித்த இறுதிப் போட்டியில் விளையாடவுள்ள அவுஸ்திரேலிய பதினொருவர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பேட் கம்மின்ஸ் , மார்னஸ் லபுஷேன், கெமரோன் க்ரீன், உஸ்மன் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ட்ரெவிஸ் ஹெட், வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்டார்க், நேத்தன் லியோன் மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆகியோர் குறித்த இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளனர்