நேபாளத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி..!

அடுத்த ஆண்டு ஜனவரி 12 முதல் பெப்ரவரி 2 வரை நடைபெறும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியை நேபாளம் நடத்த உள்ளது.
போட்டிகள் காத்மாண்டுவின் முல்பானியில் உள்ள லோயர் முல்பானி கிரிக்கெட் மைதானம் மற்றும் அப்பர் முல்பானி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
போட்டிக்கான முழு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
தகுதிச் சுற்றில் பங்கேற்பாளர்களாக இதுவரை ஐந்து அணிகள் மாத்திரமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
2024 டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்றதன் மூலம், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகள் ஏற்கனவே தகுதிச் சுற்றில் தங்கள் இடங்களை உறுதிப்படுத்தியுள்ளன. தாய்லாந்து மற்றும் போட்டியை நடத்தும் நேபாளம் ஆசிய தகுதிச் சுற்றுகள் மூலம் முன்னேறியுள்ளன. மேலும், அமெரிக்காவும் தகுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மீதமுள்ள ஐந்து அணிகள் ஏனைய பிராந்திய தகுதிச் சுற்றுகள் மூலம் உறுதிப்படுத்தப்படும்.
டி20 உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் பத்து அணிகள் தலா ஐந்து பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். சிறந்த ஆறு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன் சூப்பர் சிக்ஸ் நிலைக்குச் செல்லும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கிண்ணத்தில், போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக 12 அணிகள் பங்கேற்கும்.
2024 இல் இதில் விளையாடிய பத்து அணிகளிலிருந்து இது அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து சம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.