அறிவை விதைத்து, அன்பை வளர்த்து, பல தலைமுறைகளை உருவாக்கிய உன்னத கல்விப் பயணம் முடிவுறுகிறது.
எமது அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய கமு/கமு/ அல்-அதான் வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி UHM. ANVAR (HABEEBA Teacher) அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டும், வாழ்த்துகளும்!♥️
ஆசிரியர் திருமதி UHM. ANVAR அவர்கள், 15.05.1992 அன்று தனது ஆசிரியர் பணியினை ஆரம்பித்து,#34_வருடங்களும் #04மாதங்களும்_27நாட்களும் அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், பொறுப்புணர்வுடனும் கல்விச் சேவையாற்றி, தற்போது தனது நீண்டகால ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்று செல்கின்றார்.
🏫 சேவையாற்றிய பாடசாலைகள் மற்றும் காலப்பகுதிகள்
- கமு/கமு அஸ்-ஸபா வித்தியாலயம் – 12 வருடம் 11 மாதங்கள்
- கமு/அல்-இமாம் ரூமி வித்தியாலயம் – 16 வருடம் 4 மாதம் 19 நாட்கள்
- கமு/கமு அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை – 1 வருடம் 29 நாட்கள்
- கமு/கமு/ GMMS வித்தியாலயம், சாய்ந்தமருது – 6 மாதம் 9 நாட்கள்
- கமு/கமு அல்-அதான் வித்தியாலயம் – 3 வருடம் 5 மாதம் 11 நாட்கள்
🌷 அர்ப்பணிப்புமிக்க கல்விச் சேவை
தனது நீண்டகால ஆசிரியர் சேவையின் போது பல்வேறு பாடசாலைகளில் தரம் 1 முதல் தரம் 5 வரையான வகுப்புகளுக்கு பொறுப்பாசிரியராகவும், குறிப்பாக தரம் 05 வகுப்பாசிரியராகவும் மிகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
மேலும், தான் சேவையாற்றிய பாடசாலைகளில் பாடசாலை நலன்புரிச் சங்கத்தின் செயலாளராகவும், பொருளாளராகவும், ஒழுக்காற்றுக் குழு, கொள்வனவுக் குழு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று, அவற்றை மிகுந்த பொறுப்புணர்வுடனும் அர்ப்பணிப்புடனும் திறம்பட நிறைவேற்றியுள்ளார்.
அத்துடன், இலவச பாடநூல் மற்றும் சீருடை விநியோகம், தமிழ் தினப் போட்டிகள், சமய தின நிகழ்வுகள், குருளை சாரணியம், கல்விச் சுற்றுலாக்கள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பாடசாலை செயற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபட்டு, தான் சேவையாற்றிய ஒவ்வொரு பாடசாலையின் முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் கல்வி, ஒழுக்கம், திறன் விருத்தி மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.
🏆 புலமைப்பரிசில் பரீட்சை சாதனைகளாக…….
1997 – கமு/அல்-இமாம் ரூமி வித்தியாலயத்தில் – 7 மாணவர்களும்
2010 – கமு/அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையில் – 6 மாணவர்களும்
2011 – கமு/கமு/GMMS வித்தியாலயத்தில் – 6 மாணவர்களும் என
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேலும், பல நூற்றுக்கணக்கான மாணவர்களை வெற்றிப்புள்ளிக்கு மேலும் சித்தியடைய வழிகாட்டியுள்ளார்.
💐 அன்பிற்குரிய ஹபீபா ஆசிரியர் அவர்கள்!
தங்களின் #34வருடங்கள்04மாதங்கள்
27நாட்கள் கல்விச் சேவையில் நீடித்து நின்றது என்பது ஒரு சாதாரண விடயமல்ல! இப்பணிக்காலம் என்பது பல தலைமுறை மாணவர்களின் வாழ்க்கையை அறிவாலும், அன்பாலும் வழிநடாத்திய ஓர் உன்னதமான நீண்ட கல்விப் பயணம் ஆகும்.
தாங்கள் பணியாற்றிய ஒவ்வொரு பாடசாலையிலும் மாணவர்களின் நலனையும், பாடசாலையின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி, தங்களுக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் அர்ப்பணிப்பு, நேர்மை, அன்பு மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றியுள்ளீர்கள்.
தங்களின் சேவை முடிவடைகின்ற போதிலும், தாங்கள் விதைத்த அறிவின் விதைகளும், வழங்கிய அன்பும், உருவாக்கிய மாணவர்களின் சாதனைகளும் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
ஆசிரியர்பணியில்இருந்துஓய்வு #பெறலாம்ஆனால்மாணவர்களின் #இதயங்களில்இருந்துஒருபோதும்
ஓய்வு_பெறமாட்டீர்கள்!♥️
தங்களின் ஓய்வுக்காலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி, மனநிம்மதி, இறையருள் மற்றும் குடும்ப ஒற்றுமை, சகவாழ்வு ,அன்பு நிறைந்ததாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
🌹 நன்றியுடனும் அன்புடனும்…
பாடசாலையின் அதிபர்,
பணிக்குழுவினர்கள்,
பழைய மாணவர்கள்,
மாணவர்கள்,
மற்றும்
பாடசாலைச் சமூகம்
கமு/கமு/ அல்-அதான் வித்தியாலயம், நிந்தவூர்.

