Home இலங்கைச் செய்திகள்நற்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கான வாகனத் தரிப்பிடம் திறந்து வைப்பு!

நற்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கான வாகனத் தரிப்பிடம் திறந்து வைப்பு!

by Nabishad
0 comments

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

நற்பிட்டிமுனை மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கான வாகன தரிப்பிடம் அமைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 300,000/- (மூன்று இலட்சம்) நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கான வாகன தரிப்பிடம் பொதுமக்களின் பாவனைக்காக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் அயராத சேவைக்காக பள்ளிவாசல் நிர்வாகத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

banner

இதன் மூலம் பள்ளிவாயலுக்கு வருகை தரும் மஹல்லாவாசிகளுக்கு வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக மஹல்லாவாசிகளும், பொதுமக்களும், பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment