2
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 2வது டாக்ஸி பிக்கப் பாயிண்ட் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, வரும் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது!
ஓலா, உபர் போன்ற செயலிகள் மூலம் டாக்ஸி பதிவு செய்வோர் இனி சிரமமின்றி, விரைவாக வாகனங்களைப் பெற முடியும். பயணிகளின் வசதிக்காக நிழற்கூரை மற்றும் தெளிவான வழிகாட்டிப் பலகைகளுடன் இது அமைக்கப்பட்டுள்ளது.
