Home இந்தியா செய்திகள்ஒலிம்பிக்கின் பாதி விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்பதில்லை – பிரதமர் மோடி கவலை!

ஒலிம்பிக்கின் பாதி விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்பதில்லை – பிரதமர் மோடி கவலை!

by Nabishad
0 comments

ஒலிம்பிக்கில் இடம்பெறும் விளையாட்டுப் போட்டிகளில் பாதிக்கும் குறைவானவற்றிலேயே இந்தியா பங்கேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பங்கேற்காத ஒலிம்பிக் விளையாட்டுகளிலும் இந்தியா பங்கேற்கத் தொடங்கினால் மட்டுமே, ஒலிம்பிக்கில் நாட்டின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 ஒலிம்பிக்கில் இந்தியா 13 விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்றதாகவும், 20-க்கும் மேற்பட்ட போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அலைச்சறுக்கு, மலை ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இந்தியாவில் நீண்ட கடற்கரை மற்றும் பரந்த மலைப்பகுதிகள் உள்ளிட்ட சிறந்த புவியியல் வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

banner

மேலும், 5 முதல் 15 வயதுக்குட்பட்ட திறமையான சிறுவர்களைக் கண்டறிந்து, அவர்களின் ஆர்வத்துடன் மட்டுமல்லாமல், எந்த விளையாட்டுக்கு அவர்கள் இயல்பாகப் பொருத்தமானவர்கள் என்பதையும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சி வழங்க வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.

“21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற நவீன விளையாட்டுச் சூழலை உருவாக்க அரசு முழு உறுதியுடன் உள்ளது” எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

#NarendraModi #Olympics #India #Sports #IndianSports #NationalSportsDay #SocialTV

You may also like

Leave a Comment