News

இன்ஸ்டகிராம் மாற்றப்போகும் முக்கிய அம்சம்

இன்ஸ்டகிராம் தளத்தில் வழங்கப்பட்டு வந்த ‘முனையிலிருந்து முனை வரையிலான மறையீடாக்கப்பட்ட’ (End-to-End Encryption) குறுஞ்செய்தி வசதி, எதிர்வரும் 2026 மே 8ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என்று மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இதுவரை பயனர்களின் குறுஞ்செய்திகளைத் தனிப்பட்ட முறையில் பாதுகாத்து வந்த Encryption வசதி இனி கிடைக்காது.

இதன் மூலம், வெளிநபர்களால் குறுஞ்செய்திகளை இடைமறிப்பதைத் தடுத்து வந்த சிறப்பு பாதுகாப்பு அம்சம் நீக்கப்படுகிறது.

இந்த மாற்றத்தினால் பாதிக்கப்படக்கூடிய உரையாடல்கள் அல்லது ஊடகக் கோப்புகளை (Media) பயனர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், மே 8ஆம் திகதிக்கு முன்னரே அவற்றை தரவிறக்கம் செய்துகொள்ளுமாறு மெட்டா அறிவுறுத்தியுள்ளது.

பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் உரையாடல்களைத் தரவிறக்கம் செய்வதற்கு முன்னர் இன்ஸ்டகிராம் செயலியைப் புதிய பதிப்பிற்குப் புதுப்பிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்ஸ்டகிராம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “2026 மே 8க்குப் பிறகு இன்ஸ்டகிராமில் மறையீடாக்கப்பட்ட குறுஞ்செய்தி வசதி ஆதரிக்கப்படாது.

இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் உரையாடல்களைக் கொண்ட பயனர்களுக்கு, அவற்றைத் தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் செயலியில் காண்பிக்கப்படும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button