Sri Lanka News
மார்ச் 01 முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரம்!

முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை” நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2026 மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமாகும் வாரத்தைப் “போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக” பிரகடனப்படுத்த “முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைப் பேரவை தீர்மானித்துள்ளது.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.




