Sri Lanka News

முல்லைத்தீவில் பிரமாண்ட செஸ் போட்டி; 350 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்று அசத்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் Mullai Chess Championship 2025 சதுரங்கப் போட்டியானது நேற்றையதினம் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியின் (Magical Knight Chess Academy) ஏற்பாட்டில் இடம்பெற்றது.

இந்த மாபெரும் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்றமை முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அடையாளமாக அமைந்துள்ளது.

சமீப காலங்களில் சதுரங்கத்தில் திடீர் வளர்ச்சி அடைந்துவரும் முல்லைத்தீவு மாவட்டத்தில், இப்போட்டியானது முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தும் நிகழ்வாக இடம்பெற்றது.

குறித்த சதுரங்க போட்டியில் பாடசாலை மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெற்றோர்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பதக்கங்கள், கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததுடன் பங்குபற்றிய அனைத்து வீர வீராங்கனைகளுக்குமான சான்றிதழ்களும், மஜிக்கல் நைற் செஸ் அக்கடமியினால் (Magical Knight Chess Academy) வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button