Sri Lanka News
மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகிறது
2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாவது பாடசாலைத் தவணை கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தது.
இதன்படி, குறித்த பாடசாலைகளின் 3 ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும்.