Sports
மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி – ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா

2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது.
ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர்.
இது மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன். டெல்லி கேபிடல்ஸ் அணி நான்கு முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது.




