India News
இன்று நாடு முழுக்க இந்தியாவின் 77 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை மெரினாவில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
சிறந்த காவல் நிலையத்திற்கான விருது
* முதல் பரிசு மதுரை மாநகரம்
* இரண்டாவது பரிசு திருப்பூர் மாநகரம்
* மூன்றாவது பரிசு கோயம்புத்தூர் மாவட்டம்
காந்தியடிகள் காவலர் பதக்கம்
* விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் நடராஜன்
* விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்யாநந்தன்
* கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன்
* கடலூர் மாவட்டம் புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நடராஜன்
* சேலம் மாவட்டம் மத்திய நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் கண்ணன்




