விஜய் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதி எது தெரியுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவரது முதல் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் கடந்த 13 ஆம் திகதி திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை பகுதியில் இருந்து தொடங்கியது. இதில் அவருக்கு இருக்கும் அபரிமிதமான செல்வாக்கு வெளிப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளதால் தி.மு.க.வும் உஷாராகியுள்ளது.
தி.மு.க.வின் கோட்டையாக இருக்கும். டெல்டாவில் ஓட்டை விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக செயற்படத் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் நலத்திட்டங்களை செயற்படுத்த ஆளுங்கட்சியினர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் போட்டியிட்டால் அவரை எதிர்கொள்ள நட்சத்திர வேட்பாளரை களமிறக்கவும் தி.மு.க. தயாராகி வருகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடும் தகவல் பிற கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




