India News
த.வெ.க. தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு!

இந்தியாவின் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக 2 ஆவது மாநில மாநாட்டில் தன்னை பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சேர்ந்த சரத்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.
மதுரை மாநாட்டில் ‘ரேம்ப் வாக்’ சென்ற விஜயை சந்திக்கும் ஆவலில் சரத்குமார் ரேம்ப் மேடை மீது ஏறி உள்ளார். அப்போது அவரை பவுன்சர்கள் தூக்கி வீசியதாக தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சரத்குமார் அளித்த புகாரின்பேரில் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது குன்னம் பொலிஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது 189(2), 296(B), 115(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.