News
தங்க விலையேற்றத்தின் மத்தியில் இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின் நிலவரம்

தங்கத்தின் விலை இன்று உச்சத்தை தொட்ட நிலையில், இன்றைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று பார்க்கலாமா?
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 306 ரூபாய் 64 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 400 ரூபாய் 49 சதம், விற்பனை பெறுமதி 413 ரூபாய் 05 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 347 ரூபாய் 68 சதம், விற்பனை பெறுமதி 359 ரூபாய் 07 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (16) வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.



