News
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் – நாளை முதல் விழிப்புணர்வு

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது இந்த பிரமிட் திட்டங்கள் வேகமாக பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, நாளை முதல் ஒரு வார காலத்திற்கு இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.