News
சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்

பெப்ரவரி 09ஆம் திகதி மின்விநியோகம் தடைப்பட்டமை குறித்து சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம் – இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு
கடந்த பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டமை குறித்து சாட்சி விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த சாட்சி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க விரும்புவோர் 0772 94 31 93 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.