Accident
லொறி – மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு!

லொறி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளை – மஹாவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லேபொல – கொஹொலன்வல வீதியில் உள்ள நிலாவ சந்தியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பல்லேபொல – கொஹொலன்வல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொறி, எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.




