Accident

பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்டவர் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – சாரதி தப்பியோட்டம்

நானுஓயா பொலிஸ் பிரிவின் நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான அஞ்சல் நிலையத்திற்கு முன்பாக நானுஓயா பகுதிதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தானது நேற்று (23) இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் பலத்த காயமடைந்த பெண் பாதசாரி உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

மோட்டார் சைக்கிளில் பாதசாரி மோதியவுடன் சந்தேகத்திற்குரிய சாரதி மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்யவதற்கு விபத்து ஏற்பட்ட இடத்தில் வீதியோரமாக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காணொளியில் பதிவுகளை சோதனை செய்து வருகின்றன.

விபத்து குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Back to top button