Sports

பரபரப்பில் ஆசியக் கிண்ணம் – புள்ளிப்பட்டியலின் தற்போதைய நிலவரம்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 4 சுற்றில் இதுவரை 2 போட்டி நிறைவடைந்துள்ளன.

இதன் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இதன்படி புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 2 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக 2 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

அத்துடன் எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பிடித்துள்ளன.

இதேவேளை நாளையதினம் இடம்பெறவுள்ள போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button