Sports
துலீப் கோப்பை தொடரிலிருந்து ஆகாஷ் தீப் விலகல்!

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் ஆகாஸ்ட் 28ஆம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிற்தி போட்டிக்கு தகுதிப்பொற்றுள்ளன.
அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆஃப் போட்டியில் வடக்கு மண்டலம் – கிழக்கு மண்டல அணிகளும், இரண்டாவது பிளே ஆஃப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் ஆகாஸ்ட் 28ஆம் தேதி நடைபெறவுள்ளன.