Sports
அடுத்தடுத்த சறுக்கல் – வாய்ப்பை இழந்தது இலங்கை அணி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.
துபாயில் பங்களாதேஷுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
அதே நேரத்தில் இந்திய அணி நேற்றைய வெற்றியைத் தொடர்ந்து, இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெறவுள்ள போட்டி மிக முக்கியமான போட்டியாக அமையவுள்ளது.
இதன்படி இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி தொடரிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், வெற்றி பெரும் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெரும் என்பது சுட்டிக்கட்டத்தக்காது.
மேலும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இழந்துள்ள இலங்கை அணி, நாளை இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




