
இக்றான் இளைஞர் கலகம் சம்பியனானது.
பிரதேசமட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா – 2025
நிந்தவூர் பிரதேச மட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நேற்றைய தினம் (25.08.2025) நிந்தவூர் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு. பரீட் அவர்களின் வழிகாட்டுதலில் நிந்தவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இவ் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக கிரிக்கெட் போட்டி நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் எமது இக்றான் இளைஞர் கழகத்தின் இளம் வீரர்கள் பங்குபற்றி 2025 நடப்பாண்டிற்கான கிரிக்கெட் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
எனவே குறித்த போட்டி நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருந்த நிந்தவூர் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கும் போட்டியில் பங்குபற்றிய அனைத்து இளைஞர் கழகங்களுக்கும் மற்றும் எமது இக்றான் இளைஞர் கழகம் சார்பாக கலந்து கொண்ட இளம் வீரர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இக்றான் இளைஞர் கழகம்
அரசடித்தோட்டம்
நிந்தவூர்