இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ள ஹொங்கொங்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மேலும் 2 போட்டிகள் இன்று நடைபெறவுள்ளன.
இதன்படி பிற்பகல் 5.30 ஆரம்பமாகவுள்ள போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் அணிகள் மோதவுள்ளன. குறித்த போட்டி அபுதாபியில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள மற்றுமொரு போட்டியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி டுபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
தொடரில் இதுவரை 1 போட்டியை மாத்திரம் எதிர்கொண்டுள்ள இலங்கை அணி அதில் வெற்றிபெற்று வலுவான நிலையில் உள்ளது.
அத்துடன் ஹொங்கொங் அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்தநிலையில் ஹொங்கொங் அணி முதலாவது வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்பில் இன்று இலங்கையை அணியை எதிர்கொள்ளவுள்ளது.
மேலும் தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் பெத்தும் நிஸங்க இன்றைய போட்டியில் ஹொங்கொங் அணிக்கு சற்று அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.




